வார்த்தை (Word)
இது ஆயிர வருட சமாதான காலத்தின் துவக்கத்தில்
நடக்குமெனத் தெரிகிறது.
"கர்த்தருடைய வார்த்தை ஆபிரகாமுக்கு உண்டாகி" (ஆதி. 15:1- 4). என்பதிலிருந்து, ஆபிரகாமுடைய காது கேட்க கர்த்தர் பேசினா ரென்றல்ல, தமது கருத்தை அவன் அறியும்படி செய்தாரென்றே விளங்கலாம்.
கர்த்தருடைய வார்த்தை ஆபிரகாமுக்கு தரிசனத்தில் உண்டாகி, நான் உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் (ஆதி. 15:1) என்றபோது, அவன் “ஆண்டவரே அடியேனுக்கு என்ன தருவீர்" என்கிறான். இது ஒரு சம்பாஷணை போலத் தெரிகிறது.
என் வாயிலிருந்துப் புறப்படும் வசனம்... நான் விரும்புகிறதைச் செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்” (ஏசாயா 55:11) என்பது கர்த்தர் தமது நோக்கத்தை மனுஷரைக்கொண்டு செய்விக்கிறாரென்பதைக் காட்டுகிறது.
அவர் தமது வார்த்தையைப் பூமியிலே அனுப்புகிறார். அவருடைய சொல் மகா தீவிரமாய்ச் செல்லுகிறது (சங். 147:15). இங்கே அவருடைய வார்த்தை தூது கொண்டு போகும் ஒரு ஆள்போலவும், அவருடைய சித்தம், சீக்கிரம் நிறைவேறும் என்பதையும் குறிக்கிறது.
கர்த்தருடைய வார்த்தை, அவருடைய கட்டளையைக் கருதுகிறதாக பழைய ஏற்பாட்டில் பார்க்கிறோம்.
அந்த வார்த்தை உனக்குச் சமீபமாயும், உன் வாயிலும் இருதயத்திலும் இருக்கிறது (உபா. 30:11-14).
அப்போஸ்தலனாகிய பவுல் இந்த வார்த்தை "விசுவாசத்தின் வார்த்தை" யென்றும், இயேசுவை விசுவாசிப்பதனாலேயே இரட்சிப்பு உண்டென்றும் கூறுகிறான் (ரோமர். 10:8,9).
புதிய ஏற்பாட்டில் “வார்த்தை" என்பது தேவ வாக்கையும் அதன் பலனையும் கருதுகிறது.
மரியாள் தேவதூதனை நோக்கி உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள் (லூக்கா. 1:38).
மேய்ப்பர் தேவதூதரின் செய்தியைக் கேட்டு, அதைப் பார்க்கும்படி போனார்கள் (லூக்கா. 2:10-15).
அந்தியோகியா பட்டணத்தாரனைவரும் தேவ வசனத்தைக் கேட்கும்படி, கூடிவந்தார்கள் (அப். 13:43). இங்கே "தேவ வசனம்" என்பது சுவிசேஷத்தைக் கருதுகிறது. நமது ஆண்டவர் பிரசங்கித்ததும் "தேவ வசனம்" என்று லூக்கா 5:1இல் குறித்துள்ளது.
யோவானுடைய சுவிசேஷத்தில் வார்த்தை என்பது "வெளியாக்கப்பட்ட தேவனுடைய எண்ணம்" என்பதே (Logos). ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனாயிருந்தது. சகலமும் அவர்மூலமாய் உண்டாயிற்று. அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம் பண்ணினார்" என்று கூறியுள்ளது (யோவான். 1:1-14).
இங்கே வார்த்தை என்பது தேவத்துவத்தையும், சிருஷ்டிகராயிருந்து, மனுஷவதாரமெடுத்த இயேசு கிறிஸ்துவையுமே குறிக்கிறது.
அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லுகிறதாவது :
கிறிஸ்து தேவ பெலனும் தேவ ஞானமுமாயிருக்கிறார் (1 கொரி. 1:24). “அவரே நமக்கு ஞானமும், நீதியும், பரிசுத்தமும், மீட்புமானார்
(1 கொரி. 1:30).
இயேசு அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேருமானார். ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது (கொலோ.1:15).
யோவான் மேலும் அவரை ஜீவ வார்த்தையென்று சொல்லுகிறான் (1 யோவான். 1:1).
இதற்கேற்ப வெளி. 19:11-13இல் வெள்ளைக் குதிரைமேலேறி யிருந்தவருடைய நாமம், தேவனுடைய வார்த்தை எனப்படுகிறது.
வேதாகமத்தில் வார்த்தைக்கும். வசனத்துக்கும் இருக்கும் வித்தியாசம் அப். 10:44இல் வெளியாகிறது. "இந்த வார்த்தைகளைப்
பேதுரு பேசிக்கொண்டிருக்கையில், வசனத்தைக் கேட்ட யாவர் மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார் (அப். 10:44; 2 தீமோ.4:2).
வார்த்தை என்பது இயேசுவை விசுவாசிப்பதனாலேயே இரட்சிப்புண்டென்ற உண்மை வசனம் என்பது அதைப்பற்றிய சுவிசேஷம் (ரோமர். 10:5-9; உபா. 30:14).