அர்மகெதோன் (Armageddon)
(மெகிதோவின் குன்று)
மகெதோன் மலை. இதின் அர்த்தம் கூடிச் சேரும் இடம் அல்லது யுத்த ஸ்தலம் என்பது (வெளி. 16:6). இந்த இடம் கலிலேயா மலைகளுக்கும், இஸ்ரவேல் மலைகளுக்கும் இடையிலுள்ள ஒரு பெரிய சமபூமி. பழைய ஏற்பாட்டுக் காலத்தில் ஒரு பிரசித்திபெற்ற யுத்த பூமியாக இருந்தது.
இங்கே பாராக் சிசெராவையும், கானானியரையும் தோற் கடித்தான் (நியா.5:19).
இஸ்ரவேல் இராஜ்யத்துக்கடுத்த பிராண சேத சம்பவங்களும் நடந்திருக்கின்றன. யோசியா இராஜா இவ்விடத்தில் கொல்லப் பட்டான் (2 இரா. 23:29,30).
கடைசி நாள்களில் பிசாசுகளின் ஆவிகள், தேவனுடைய மகா நாளில் நடக்கும் யுத்தத்திற்கு, பூமியின் இராஜாக்களை இந்த இடத்தில் கூட்டிச் சேர்க்கும்படிக்குப் புறப்பட்டு போகிறது. (வெளி. 16:14-16).