ஆமாத் (Hamath)
(கோட்டை)
ஓரேன்டஸ் என்னும் தேசத்தின் தலைநகரம். யாத்திராகம நாள்கள் துவங்கி, தீர்க்கதரிசனகாலம் வரைக்கும், ஆமாத் சீரியாவில் ஒரு பெரிய பட்டணமாயிருந்தது. ஆமாத்துக்குப் போகிற வழி என்பது ஒரு விசாலமான பாதை என விளங்குகிறது (எண். 13:21; 34:8; நியா. 3:3). சாலொமோன், யெரொபெயாம் என்பவர்களின் நாட்களில் அப்படி இருந்ததாகச் சொல்லப்பட்டுள்ளது (1 இரா. 8:65; 2 இரா. 14:25-28).
ஆமாத்தின் இராஜாவாகிய தோயீ, தாவீதுக்கு வெகுமா னங்களை அனுப்பி, அவனோடு சிநேகிதம்பண்ணினான் (2 சாமு. 8:9).
சாலொமோன் ஆமாத் தேசத்தில் இரஸ்துக்களின் பட்டணங்கள் அனைத்தையும் கட்டினான் (2 நாளா. 8:4).
ஆமாத் ஒரு பெரிய பட்டணமென்றும், ஆமாத் துவக்கி இஸ்ரவேலை ஒடுக்குகிற ஒரு ஜாதி எழும்புமென்றும் ஆமோஸ்குறிக்கிறான் (ஆமோஸ் 6:14).
அக்காலத்தில் இரண்டாம் விசை ஆமாத்திலும் துரத்துண்ட இஸ்ரவேலைக் கர்த்தர் கூட்டிச் சேர்ப்பார் (ஏசாயா 11:11).
ஆமாத்தும் பொல்லாத செய்திகேட்டு கலங்குகிறது (எரே. 49:23). அசீரிய இராஜா ஆமாத்திலிருந்தும் ஜனங்களை வரப்பண்ணி சமாரியாவில் குடியேற்றினான் (2இரா. 17:24).