« Back to word list

ஆமோன்(Amon) (கி.மு.643)

(சாமர்த்திய வேலைக்காரன்)

யூதாவுடைய இராஜா. மனாசேயின் குமாரன். இருபத்திரண்டு வயதில் இராஜாவாகி இரண்டு வருடம் எருசலேமில் அரசாண்டான். அவன் தன் தகப்பன் சேவித்த நரகலான விக்கிரகங்களைப் பணிந்துகொண்டான். அவனு டைய ஊழியக்காரர் அவனை அரண்மனையில் கொன்றுபோட்டார்கள். ஆனால் தேசத்து ஜனங்கள் அவனைக் கொன்றவர்களை வெட்டிப்போட்டு, எட்டு வயதான அவன் குமாரனாகிய யோசியாவை இராஜாவாக்கினார்கள் (2இரா.21:19-26; 2 நாளா. 33:21-25). ஆமோன் இயேசுவின் முன்னடி யாரில் ஒருவன் (மத். 1:10).

2. ஆகாப் இராஜாவின் நாள்களில் சமாரியாப் பட்டணத்துத் தலைவன். ஆகாப் மிகாயாவைச் சிறைச்சாலையில் வைக்கும்படி இவனிடம் அனுப்பினான் (1 இரா. 22:26).

3. சிறையிருப்பிலிருந்து திரும்பிவந்த சாலமோனின் வேலைக்காரருக்குள் ஆமோனின் புத்திரரும் இருந்தார்கள் (நெகே. 7:59). 'ஆமி' என்று எஸ்றா 2:57இல் குறித்துள்ளது.

பாகால் - ஆமோன்

(திரளின் தெய்வம்)

இங்கே சாலொமோனுக்கு ஒரு திராட்சத் தோட்டம் இருந்தது (உன். 8:11).

« Prev 78 / 564 Next »