ஆமோஸ் (Amos)
(பாரம் சுமப்பவன்)
1. பன்னிரு தீர்க்கதரிசிகளில் ஒருவன். யூதேயாவிலுள்ள தெக்கோவா ஊரான் யூதாவின் இராஜாவாகிய உசியாவின் நாள்களிலும், இஸ்ரவேலின் இராஜாவாகிய யெரொபெயாமின் நாள்களிலும் இஸ்ரவேலைக் குறித்துத் தீர்க்கதரிசனம் சொன்னான் (ஆமோஸ். 1:1).
காலம். கி.மு. 808.
தீர்க்கதரிசியாகுமுன் ஆமோஸ் மந்தை மேய்க்கிறவனும், காட்டத்திப் பழங்களைப் பொறுக்குகிறவனுமாய் இருந்தான். மந்தையின் பின்னாலே போகிறபோது கர்த்தர் இவனை அழைத்தார் (ஆமோஸ். 7:14,15).
இஸ்ரவேலுக்கு விரோதமாக ஆமோஸ் தீர்க்கதரிசனம் சொன்னதைப் பெத்தேலின் ஆசாரியனான அமத்சியா தடுத்து, அவனைத் துரத்த முயற்சித்தான். ஆனாலும் ஆமோஸ் அஞ்சாமல் தீர்க்கதரிசனம் சொன்னான் (ஆமோஸ். 7:14).
2. மரியாளின் புருஷனாகிய யோசேப்பின் முற்பிதா (லூக்கா. 3:25).