« Back to word list

எக்ரோன் (Ekron)

(இயற்கையாக்குதல்)

இது பெலிஸ்தருடைய பிரதான ஐந்து பட்டணங்களிலொன்று. கானான் பிரிக்கப் பட்ட பொழுது இது முதலாவது யூதாவுக்கும், பின்பு தாணுக்கும் கொடுக்கப்பட்டது (யோசுவா. 15:45,46; 19:43).

பெலிஸ்தர் தேவனுடைய பெட்டியை எக்ரோனுக்கு அனுப்பவே, அவ்வூரார் கூக்குரலிட்டார்கள் (1 சாமு. 5:10). பாகால் சேபூப் எக்ரோனின் தேவன் (2 இரா. 1:2, 3,6). இதுவும் பெலிஸ்தருடைய மற்றப் பட்டணங்களும், தீர்க்கதரிசிகளால் சபிக்கப்பட்டன (ஆமோஸ் 1:8; எரே. 25:20). செப்பனியா. “எக்ரோன் வேரோடே பிடுங்கப்படும்" என்கிறான். (செப். 2:4). சகரியா, தீருவின் அழிவினிமித்தம் எக்ரோனில் பயமுண்டாகும் என்கிறான் (சக. 9:5-7).

« Prev 114 / 564 Next »