எபிரோன் (Hebron)
(உடன்படிக்கை)
யூதேயா தேசத்தில், மலைத் தேசத்திலுள்ள ஒரு பட்டணம். எருசலேமிலிருந்தும், பெயர்செபாவிலிருந்தும் இருபது மைல் தூரத்திலுள்ளது.
எகிப்திலுள்ள சோவான் பட்டணத்துக்கு ஏழு வருடத்திற்கு முன்னே கட்டப்பட்டது (எண். 13:22). பலஸ்தீனா தேசத்திலுள்ள பட்டணங்களெல்லாவற்றிலும் பார்க்க இது முந்தினது. இதன் முதற் பேர், ஏனாக்கியர் இருந்த "கீரியாத் அர்ப்" (யோசுவா. 14:15; நியா. 1:10). மம்ரே இதற்குச் சேர்ந்தது (ஆதி. 13:18). ஆபிரகாமும், ஈசாக்கும் இங்கே தங்கியிருந்தார்கள் (ஆதி. 35:27). ஆபிரகாம் தன் மனைவி சாராளை அடக்கம் பண்ணுவதற்கு கிரயத்துக்கு வாங்கின மக்பேலா குகையும் இங்கேயுள்ளது (ஆதி. 23:19). தற்சமயத்தில் பத்தாயிரம் ஜனங்கள் இங்கே வாசமாயிருக்கிறார்கள்.
யோசுவா எபிரோனைக் காலேபுக்குச் சுதந்திரமாகக் கொடுத்தான் யோசுவா.14:13). அங்கேயிருந்த ஏனாக்கியரை காலேப் துரத்தி விட்டான் (யோசுவா. 15:13,14). இங்கே ஓர் அடைக்கலப்பட்டணம் ஏற்படுத்தப்பட்டது (யோசுவா. 20:7).
எபிரோனில் தாவீதுக்குப் பிள்ளைகள் பிறந்தார்கள் (2 சாமு. 3:2). அப்னேர் இங்கே கொல்லப்பட்டான் (2 சாமு. 4:1). இஸ்போசேத்தின் தலையை எப்ரோனில் அடக்கம் பண்ணினார்கள் (2 சாமு. 4:12).
தாவீது எப்ரோனில் யூதாவின் மேல் ஏழு வருடம் ஆறு மாதம் இராஜ்யபாரம் பண்ணினான் (2 சாமு. 5:5). அப்சலோம் எப்ரோனில் இராஜாவானான் (2 சாமு. 15:10). ரெகொபெயாம் இதைக் கட்டினான். (2 நாளா.11:10).
2. லேவியின் புத்திரனாகிய கோகாத்தின் மூன்றாம் மகன் (யாத்.6:18; எண். 3:19; 1 நாளா. 6:2; 23:12).
3. மெரேசாவின் குமாரன் (1 நாளா 2:42).