« Back to word list

ஏலி (Eli)

(கர்த்தர் மேன்மையுள்ளவர்)

ஏலி சீலோவில் கர்த்தருடைய ஆலயத்தில் ஆசாரியனாய் அநேக வருடங்கள் ஊழியஞ்செய்தான். சாமுவேல் இவனுக்குக் கீழ் வளர்ந்தான் (1 சாமு. 1:9; 1 இரா. 2:21).

இவனுடைய வம்ச வரலாற்றைப்பற்றி நிச்சயமாய்ச் சொல்ல முடியாவிடினும், இவன் ஆரோனுடைய மகனாகிய இத்தாமாரின் சந்ததியான்.

ஏலி பயபக்தியுள்ளவனாயிருந்தும், அவனுடைய குமாரராகிய ஓப்னியும், பினெகாசும் துன்மார்க்க நடத்தையுள்ளவர்களா யிருந்தார்கள் (1 சாமு. 2:23-25).

ஏலியினால் அவர்களை அடக்கக் கூடாமற் போயிற்று.

தேவனுடைய மனுஷன் ஒருவன் ஏலியிடம் வந்து அவனுடைய குமாரருடைய துர்நடத்தையினிமித்தம் அவனுடைய குடும்பத்தின் மேல் வரப்போகிற தேவதீர்ப்பை அறிவித்தான் (1 சாமு. 2:27-36). சாமுவேலும் தனக்கு கிடைத்த வெளிப்படுத்தலை ஏலிக்கு அறிவித்தான் (1 சாமு. 3:11-18). பெலிஸ்தரோடு யுத்தம் நடந்தபோது, ஏலியின் குமாரர் கர்த்தருடைய பெட்டியை யுத்தக்களத்துக்குக் கொண்டு போகவே, பெட்டி பிடிபட்டது. அவர்களும் கொல்லப் பட்டார்கள். இதைக் கேள்விப்பட்டு தொன்னூற்றெட்டு வயதாயிருந்த ஏலியும் மல்லாக்காக விழுந்து மரித்தான்.

ஏலி இஸ்ரவேலை நாற்பது வருடம் நியாயம் விசாரித்தான் (1 சாமு. 4:1-18). இவனே முதன் முதல் பிரதான ஆசாரியனாயும், நியாயாதிபதியாயுமிருந்தவன்.

« Prev 169 / 564 Next »