ஏலிம் (Elim)
(பேரீச்ச மரங்கள்)
இஸ்ரவேலர் சிவந்த சமுத்திரத்தைக் கடந்தபின் பாளயமிறங்கின இரண்டாம் இடம். மாராவில் கசப்பான தண்ணீரிருந்தது. ஆனால் இவ்விடத்தில் பன்னிரெண்டு நீருற்றுகளும், எழுபது பேரிச்ச மரங்களும் இருந்தன (யாத். 15:27).
இது சுயெஸ் (Suez) குடாக் கடலிலிருந்து 40 மைல் தூரத்திலுள்ள ஓர் இடமென்று சிலர் உத்தேசிக்கிறார்கள் (எண். 33:9). தற்காலத்தில் இது 'குறுன்டென்' எனப்படும் பாலைவனம்.