« Back to word list

ஏவில் மெரொதாக் (Evil Merodach)

பாபிலோனிய இராஜாவாகிய இரண்டாம் நேபுகாத்நேச்சாரின் மகனாகிய இவன் அவனுக்குப் பின் இராஜாவானான். யூதா இராஜாவாகிய யோயாக்கீன் 37 வருடம் சிறையிருந்தபின் அவனை விடுதலையாக்கி, அவனுடைய, சிங்காசனத்தை உயர்த்தி, உயிரோடிருந்த நாளெல்லாம் தனக்கு முன் போஜனம் பண்ணும்படி செய்தான் (2 இரா. 24:27-30; எரே. 52:31-39).

ஏவில் மெரொதாக் இரண்டு வருடம் ஆளுகை செய்தபின் இவனுடைய மைத்துனனாகிய நரிகிலிசார் இவனைக் கொன்று தானே இராஜாவானான்.

« Prev 172 / 564 Next »