ஐபிராத்து நதி (Euphrates)
ஆசியாவின் மேற்பக்கத்திலுள்ள மகா பெரிய நதி. இதை நதியென்று யாத் 23:31லும், பெரிய நதி என்று ஆதி. 15:18லும் சொல்லியுள்ளது.
இது அர்மேனிய மலைகளிலிருந்து துவங்கி தென் கிழக்காய் ஓடி பெர்சிய கடலுக்குள் பாய்கிறது. தற்போது அதன் நீளம் 1780 மைல்,
ஏதேன் தோட்டத்திலிருந்த நாலாம் ஆற்றின் பெயர் ஐபிராத்து (ஆதி. 2:14). கர்த்தர் இஸ்ரவேலுக்குக் கொடுத்த தேசத்தின் எல்லையில் ஐபிராத்து நதியும் உட்பட்டிருந்தது (உபா. 11:24).
ஆதாதேசர் என்னும் இராஜாவை தாவீது இராஜா ஐபிராத்து நதியண்டையில் முறியடித்தான் (2 சாமு. 8:3). வடதேசத்தில் ஐபிராத்து நதியண்டையில் கர்த்தருக்கு ஒரு யாகமும் உண்டென்று எரேமியா கூறுகிறான் (எரே. 46:10).
ஐபிராத் நதியண்டை கட்டப்பட்டிருந்த நான்கு தூதரை அவிழ்த்து விடும்படி சொன்ன சத்தத்தை யோவான் கேட்டான் (வெளி. 9:14).