ஒக் (Og)
(கி.மு.1452)
(நீண்ட கழுத்துடையவன்)
பாசான் இராஜா. இவனுக்கு 60 பட்டணங்கள் உள்ள ஒரு தேசம் இருந்தது. அவைகளில் அஸ்தரோத், எத்ரேயி என்பவை இராஜரீகப் பட்டணங்கள்.
இவன் இஸ்ரவேலுக்கு விரோதமாய் வந்தபோது, எத்ரேயுவில் தோற்கடிக்கப்பட்டான் (எண். 21:32-35).
இவன் ஓர் இராட்சதன். அவனுடைய கட்டில் இரும்பினால் செய்யப்பட்டு, ஒன்பது முழ நீளமும், நான்கு முழு அகலமுமா யிருந்தது.
அறுபது பட்டணங்கள் உள்ள அவனுடைய தேசம் பின்பு மனாசேயின் பாதி கோத்திரத்துக்குக் கொடுக்கப்பட்டது (உபா.3:13). இவனுடைய தோல்வியைப்பற்றி வேதாகமத்தில் பல முறைகளில் குறிக்கப்பட்டுள்ளது (யோசுவா. 9:10; நெகே. 9:22; சங். 135:11; 136:20).