« Back to word list

ஒத்னியேல் (Othniel)

இவன் கேனாசின் மகன். காலேபின் மருமகன். இவன் கீரியாத் செப்பாரைப் பிடித்ததினிமித்தம், காலேப் தன் மகள் அக்சாளை, அவனுக்கு விவாகம் பண்ணிக் கொடுத்தான் (நியா. 1:13; யோசுவா. 15:17). பின்பு இஸ்ரவேல் பாகால் விக்கிரகங்களைச் சேவிக்கத் தொடங்கினபடியால், கூசான்ரிஷதாயீமின் கையில் விற்கப் பட்டார்கள். இஸ்ரவேல் அவனை எட்டு வருடம் சேவித்த பின் ஒத்னியேல் எழும்பி அவனைத் தோற்கடித்து, இஸ்ரவேலை விடுதலையாக்கி 40 வருடம் நியாயம் விசாரித்தான் (நியா. 3:9-11). இவன் இஸ்ரவேலின் முதல் நியாயாதிபதி, ஆத்தாத் என்ற ஒரு குமாரன் இவனுக்கு இருந்தான் (1 நாளா. 4:13).

2. தாவீதின் நாள்களில் ஒத்னியேல் சந்ததியானான எல்தாயி என்னும் நெத்தோபாத்தியன் பன்னிரெண்டாம் சேனாதிபதியா யிருந்தான் (1 நாளா. 27:15).

« Prev 175 / 564 Next »