« Back to word list

கடைசி நாள்கள்

(கி.பி. 31)

பஸ்கா பண்டிகைக்கு ஆறு நாளைக்கு முன் இயேசு, பெத்தானியாவுக்குப் போனார்.

சனிக்கிழமை அவருக்கு சீமோன் வீட்டில் இரா விருந்து பண்ணினார்கள். மார்த்தாளும், லாசருவும் அங்கேயிருந்தார்கள். மரியாள் விலையேறப் பெற்ற தைலத்தால் அவரை அபிஷேகம் பண்ணினாள் (யோவான். 12:1-8).

ஞாயிற்றுக்கிழமை பாடுபட்ட வாரத்தின் (Passion Week) முதலாம் நாள். இயேசு தேவாலயத்துக்குப் பவனிபோய், திரும்பிப் பெத்தானியா வுக்குப் போனார் (மத். 12:1-11).

திங்கட்கிழமை அத்திமரம் பட்டுப்போனது. தேவாலயத்தைச் சுத்திகரித்தல்.

செவ்வாய்க்கிழமை இயேசு தேவாலயத்தில் உபதேசம் பண்ணுகையில் ஆசாரியரும் மூப்பரும் வந்து, அவர் என்ன அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறார் என்று கேட்டார்கள். அதற்கு பிரதியுத்திரமாக இயேசு ஒரு கேள்வி கேட்கவே அவர்கள் தெரியாது என்று மறுமொழி கொடுத்தார்கள் (மத். 21:23-28).

பின்பு பரிசேயர், ஏரோதியர், சதுசேயர் எல்லாரும் கூடி ஆலோசனைபண்ணி அவரிடம் மூன்று கேள்விகள் கேட்டார்கள். அவர் கொடுத்த மாறுத்திரத்திற்கு அவர்களால் ஒன்றும் சொல்லக் கூடாமற் போயிற்று. (மத். 22:15-46).

அப்பொழுது அவர் வேதபாரகர், பரிசேயர் என்பவர்களுடைய மாயங்களைக் குறித்து பல காரியங்களைச் சொல்லி ஜனங்களையும், தமது சீஷர்களையும் எச்சரித்தார் (மத். அதி. 23).

காணிக்கைப் பெட்டியில் ஒரு துட்டுக் காசு போட்ட ஏழை விதவையைப்பற்றி மெச்சிப் பேசினார் (மாற்கு. 12:41-44).

அவர் தேவாலயத்தை விட்டுப் புறப்படும்போது, ஒரு சீஷனுடைய கேள்வியின் பயனாக நீண்ட ஒரு பிரசங்கம் செய்தார். தேவாலயத்தின் அழிவு, உலக முடிவு, கடைசி நியாயத் தீர்ப்பு என்பவைகளைப்பற்றிப் பேசினார் (மத். 25:31-46). இந்த நாளிலேயே யூதாஸ்காரியோத்தும் அவரைக் காட்டிக்கொடுக்க ஒத்துக் கொண்டான் (மத். 26:14-16; லூக்கா 22:1-6).

புதன்கிழமை பெத்தானியாவில் தங்கியிருந்தார்.

வியாழக்கிழமை சீஷரிடம் பஸ்காவைப் புசிப்பதற்கு ஆயத்தம் பண்ணும்படி சொன்னார்.

சாயங்காலமானபோது பன்னிருவரோடுங்கூட பந்தியிருந்தார் (மத். 26:17-20). அதன்பின் சீஷருக்கு அவர் செய்த நீண்ட பிரசங்கங்கள் லூக்கா 22:14-38லும், யோவான் 14-16 அதிகாரங்களிலும் குறித்துள்ளன.

பின்பு அவர் புறப்பட்டு சீஷருடன் ஒலிவ மலைக்குப்போய், கெத்செமனே தோட்டத்தில் வியாகுலப்படுகையில், யூதாஸ் காரியோத்து என்பவனால் காட்டிக் கொடுக்கப்பட்டு, பிடிக்கப்பட்டு பிரதான ஆசாரியன் வீட்டுக்குக் கொண்டு போகப்பட்டார் (லூக்கா. 22:39-54; யோவான். 18:1-13).

யூத அதிகாரிகள் அவரை விசாரித்த பின், பிலாத்துவுக்கு முன் கொண்டு போனார்கள். அவன் அவரில் ஒரு குற்றமும் காணாதிருந்தும், யூதரைப் பிரியப்படுத்துவதற்காக, அவர்கள் சத்தமிட்டு கேட்டபடி சிலுவையிலறையும்படி ஒப்புக் கொடுத்தான் (யோவான்.18:12;19:16; லூக்கா. 23:13-25).

« Prev 190 / 564 Next »