காபிரியேல் (Gabriel)
(தேவ மனுஷன்)
வேதாகமத்தில் சொல்லப்பட்ட இரண்டு தூதரில் இவன் ஒருவன். மற்றது, பிரதான தூதன் மிகாவேல் (யூதா. 9). வெள்ளாட்டுக்கடாவின் தரிசனத்தையும், ஏழு வாரங்களைப் பற்றியும், தானியேலுக்கு விளங்கப்பண்ணும்படி இவன் அனுப்பப்பட்டான். (தானி. 8:16; 9:21).
இவன் சகரியாவுக்குத் தரிசனமாகி, அவனுக்கு ஒரு குமாரன் பிறப்பான் என்றும், அவனுக்குக் கொடுக்கும் பேர் என்னவென்றும் சொன்னான். பின்பு இயேசுவின் பிறப்பைப் பற்றி, மரியாளுக்கு அறிவிக்கவும் அனுப்பப்பட்டான் (லூக்கா. 1:26-38).