« Back to word list

கெரிசீம் (Gerizim)

(பாழ் நிலம்)

தற்காலத்திலிருக்கிற “நபுலஸ்” என்னும் பட்டணத்துக்கு அருகில் இருக்கும் பள்ளத்தாக்கின் இருபக்கமுமுள்ள மலைகள், ஏபால்,கெரிசீம். மோசேயின் கட்டளைப்படி (உபா. 11:29) இஸ்ரவேல் ஜனங்களில் பாதிப் பேர், கெரிசீம் மலைக்கு எதிர் புறமாகவும், பாதிப்பேர் ஏபால் மலைக்கு எதிர்புறமாகவும் நிற்பார்கள். லேவியர் கர்த்தரின் பெட்டியைச் சுமந்துகொண்டு பள்ளத்தாக்கில் நின்று கொண்டிருக்கும்போது, யோசுவா நியாயப் பிராமாணத்திலுள்ள ஆசீர்வாதமும், சாபமுமாகிய சகல வார்த்தைகளையும் வாசிப்பான் (யோசுவா .8:33-35). ஆசிர்வாதங்கள் கூறப்பட்டபோது கெரிசீம் மலையில் நின்றவர்கள் ஆமென் என்றும், சாபங்கள் கூறப்பட்டபோது ஏபால் மலையில் நின்றவர்கள் ஆமென் என்றும் சொன்னார்கள் (உபா. 27:12).

யோதாம், கெரிசீம் மலை உச்சியில் நின்று, சீகேம் மனுஷரோடு உவமையாய்ப் பேசினான் (நியா.9:7).

சமாரியர் பல நூற்றாண்டுகளாக இந்த மலையில் தொழுது கொண்டு வந்தார்கள். ஆபிரகாம் இந்த மலைமேல் ஈசாக்கைப் பலியிட்டானென சமாரியர் நம்பினார்கள் (ஆதி. 12:6). சமாரிய ஸ்திரீ யாக்கோபின் கிணற்றடியில் நின்று இந்த மலையைக் குறிப்பிட்டுக் காட்டிப் பேசியிருப்பாள் (யோவான். 4:20).

இந்த மலைகளுக்கிடையில் யாக்கோபுடைய கிணறும், யோசேப்பின் கல்லறையும் இருக்கிறதாகச் சொல்லுகிறார்கள் (யோவான். 4:5; யோசுவா. 24:32).

« Prev 236 / 564 Next »