கேதேஸ் (Kadesh)
(கோயில்)
யூதாவிலுள்ள ஒரு பட்டணம் (யோசுவா . 15:23; 1நாளா.6:72). கெர்சோன் புத்திரருக்குக் கொடுத்த பட்டணம். கீசோன் என்றும் சொல்லியுள்ளது (யோசுவா. 21:28). நப்தலி கோத்திரத்துக்குக் கொடுக்கப்பட்ட அரணிப்பான பட்டணம் (யோசுவா. 12:22; 19:37). பின்பு இது ஓர் அடைக்கலப் பட்டணமாயிற்று (யோசுவா. 20:7; 21:32).
பாராக் குடியிருந்த நப்தலியிலுள்ள இடம் (நியா.4:6). திகிலாத்பிலேசர் கேதேஸில் இருந்தவர்களையும் சிறையாகக் கொண்டு போனான் (2 இரா. 15:29).