« Back to word list

கேனியன்(ர்) (Kenite)

அமலேக்கியரோடு சம்பந்தப்பட்ட ஒரு நாடோடி ஜாதி (ஆதி. 15:19). கேனியர் இஸ்ரவேலரோடு சிநேகமாயிருந்து யூதா கோத்திரத் தோடு சேர்ந்து கொண்டார்கள். தாவீதின் நாள்களில் யூதா தேசத்தின் தென் பக்கத்தில் குடியிருந்தார்கள் (1 சாமு. 27:10). ரேகாப் சந்ததியார் கேனியரோடு ஐக்கியப்பட்டிருந்தார்கள் (1 நாளா. 2:55).

மோசேயின் மாமன் ஒரு கேனியன் கேனியனான ஏபேர் மற்றக்கேனியரை விட்டுப் பிரிந்து, தன் கூடாரத்தைக் காதேசில் போட்டிருந்தான் (நியா. 4:11).

சவுல் அமலேக்கியரை மடங்கடித்தபோது கேனியரைத் தப்ப வைத்தான் (1 சாமு. 15:6).

தாவீது அமலேக்கியரிலிருந்து கொள்ளையாடினதில் வெகு மதிப்பாக சிலவற்றை கேனியருக்கும் அனுப்பினான் (1 சாமு. 30:29).

நெகேமியா எருசலேமில் பழுதுபார்த்துக் கட்டின வேலையில்,கேனியரும் உதவியாயிருந்தார்கள் (நெகே. 3:16).

« Prev 238 / 564 Next »