« Back to word list

சீமேயி (Shimei)

(கர்த்தரே புகழ்ச்சி)

சீமேயி சவுலுக்கு இனத்தவனாகிய கேராவின் குமாரன். அப்சலோமின் கலகத்தினிமித்தம், தாவீது புறப்பட்டுப் போகையில், இவன் தாவீதைத் தூஷித்துக்கொண்டே நடந்து போனான் (2 சாமு. 16:5). கர்த்தர் அவன் இப்படிச் செய்ய இடம் கொடுத்திருக்கக் கூடுமென்று சொல்லி, தாவீது சகித்துக்கொண்டான் (2 சாமு. 16:5-13).

தாவீது திரும்பி வரும்போது, சீமேயி வந்து இராஜாவுக்கு முன்பாகத் தாழ விழுந்து, மன்னிப்புக் கேட்டதினிமித்தம் மன்னிக்கப்பட்டான். சாலொமோன் சீமேயிடம் ஒரு வீடு கட்டி, எருசலேமில் இருக்க உத்தரவு கொடுத்தான். மூன்று வருடங்களுக்குப் பின், சீமேயி காத் ஊருக்குப் போனதினால் அவனைப் பெனாயாவைக் கொண்டு கொன்றான் (1 இரா. 2:36-46).

2. லேவியின் பேரனும், கெர்சோனின் குமாரனும் (எண். 3:17,18; 1 நாளா. 6:16,17; சக. 12:13; யாத். 6:17).

3. சிமியோனின் சந்ததியான். சீமேயிக்குப் பதினாறு குமாரரும், ஆறு குமாரத்திகளும் இருந்தார்கள் (1 நாளா. 4:26,27).

4. அதோனியா இராஜாவாக எத்தனித்தபோது, சீமேயி அவனுக்கு உடந்தையாயிருக்கவில்லை (1 இரா. 1:8). பின்பு பென்யமீனில் சாலொமோனுடைய மணியக்காரனாயிருந்தான் (! இரா. 4:18). சீமேயி

என்னும் பெயருள்ளவர்களைக் குறித்து பின்வரும் இடங்களில் குறிக்கப்பட்டிருக்கிறது (1 நாளா. 6:29; 42, 43; 5:4; 8:13; 27:27).

5.சிமேயா (1 நாளா. 25:17).

6. சீமேயு (1 நாளா. 27:27).

« Prev 284 / 564 Next »