« Back to word list

சுக்கோத் (Succoth)

1. இஸ்ரவேலர் ராமேசை விட்டு, முதன் முதல் பாளயமிறங்கின இடம் (யாத்.12:37; 13:20; எண். 33:5,6).

2. காத்தியருக்குக் கொடுக்கப்பட்ட யோர்தானுக்குக் கிழக்கே யுள்ள ஒரு பட்டணம் (யோசுவா. 13:27). யாக்கோபு ஏசாவைச் சந்தித்த பின் அங்கேபோய் ஒரு வீடு கட்டி, மிருக ஜீவன்களுக்குக் குடிசைகளையும் போட்டான். அதினாலே அந்த ஸ்தலத்துக்குச் சுக்கோத் என்று பேரிட்டான் (ஆதி. 33:1-17).

கிதியோன் சேபாவையும், சல்முனாவையும் பின் தொடர்ந்து போகையில், இப்பட்டணத்தார் அவனுக்கு அப்பம் கொடாததி னிமித்தம் அவன் முள்ளுகளினாலும், நெரிஞ்சல்களினாலும் அவர்களுக்குப் புத்திவரப் பண்ணினான் (நியா. 8:5-17).

« Prev 293 / 564 Next »