« Back to word list

சூசான் (Shusan)

(லீலி)

இது ஏலாம் தேசத்தில் ஊலாய் ஆற்றங்கரையிலிருந்த பாபிலோனி யருடைய பேர் பெற்ற தலைநகரம். இங்கே அரண்மனையிருந்தது.

கி.மு. 640இல் அசீரியா இராஜா இதைப்பிடித்து, சூசானிலிருந்த ஜனங்களைச் சமாரியாவுக்குக் கொண்டுவந்து குடியேற்றினான்.

பிற்பாடு சூசான் சுயாதீனம் பெற்று மறுபடியும் பெரிய நகரமாயிற்று. கோரேஸ் சூசானைப் பெர்சிய இராஜ்யத்தின் தலைநகரமாக்கினான். அகாஸ்வேருவின் அரண்மனையும், எஸ்தர் இருந்ததும் இங்கேயே (நெகே. 1:1; எஸ்தர். 1:2; 9:11).

தானியேல் தரிசனம் கண்ட போது சூசான் அரண்மனையி லிருந்தான் (தானி. 8:2).

ஒருமுறை மகா அலெக்சாந்தர் இதைக் கைப்பற்றினான். பிற்காலத்திலே இங்கே சுரங்கங்கள் தோண்டி, அநேக பொருட்களைக் கண்டுபிடித்தான்.

« Prev 294 / 564 Next »