தம்மூஸ் (Tammuz)
1. பாபிலோனியர், அசீரியர், பெனிக்கேயர் வணங்கின ஒரு தெய்வம். கிரேக்கர் அதோனிஸ் என்று சொன்னார்கள்.
இது மேய்ப்பருடைய ஆண் தெய்வம். இஸ்தார் அவர்களுடைய பெண் தெய்வம்.
எசேக்கியேல், தன் தரிசனத்தில் தம்மூசுக்காக அழுது கொண்டிருக்கும் ஸ்திரீகளை ஆலயத்தின் வாசலில் கண்டான் (எசே. 8:14).
இதைப் பற்றிய கட்டுக்கதை என்னவெனில். தம்மூசு மரித்த போது, அவனுடைய மனைவி மற்றவர்களையும் அழைத்துத் துக்கம் கொண்டாடி, அவனைச் சந்திக்கும்படி பாதாளத்துக்குப் போனபோது, அவன் உயிர்த்தெழுந்தான் என்பதே.
இதை நினைவுகூரும்படி, பிற்காலங்களில் ஸ்திரீகள் கோயில்களுக்குப் போய்ப் புலம்புவது வழக்கமாய் இருந்தது. அத்தருணங்களில் அவலட்சணமான காரியங்களும் நடைபெற்றன.
2. எபிரெயரின் பஞ்சாங்கத்தில் இது நான்காம் மாதம் எனக் குறித்துள்ளது.