தரியு (Darius)
(கி.மு. 621-486)
1. தரியு என்பது மூன்று பெர்சிய இராஜாக்களின் பெயராகும். மகா தரியு எனப்படும் முதலாம் இராஜா ஜஸ்தாவிஸ் என்பவன். அவன் இராஜ்யத்தைப் பலப்படுத்தி மேலாக்கினான். அவன் யூதருக்கு தயவு செய்து, அவர்கள் எருசலேமுக்குப் போய் தேவாலயத்தைக் கட்ட உதவி செய்தான். அப்படியே யோசுவா, செரூபாபேல் என்பவர்கள் ஜனங்களைக் கூட்டிக்கொண்டு போய் தேவாலயத்தைக் கட்டத் தொடங்கியபோது, நேரிட்ட தடைகளிலும் அவர்களுக்குச் சகாயம் செய்தான் (எஸ்றா. 3:1-13; 6:1-15; ஆகாய். 1:1; சக. 1:7).
2.பெர்சியனாகிய தரியு (கி.மு.326-330).
இவன் பெர்சியாவின் கடைசி இராஜா, நெகே. 12:22இல் கூறப்பட்டுள்ள இராஜா இவனே.
3. மேதியனாகிய தரியு (தானி. 11:1).
இவன் மேதிய குலத்தானாகிய அகாஸ்வேருவின் புத்திரன் (தானி. 9:1).
கல்தேயரின் இராஜாவாகிய பெல்ஷாத்சார் கொலை செய்யப்பட்டபோது, இவன் பிரதி இராஜாவானான் (தானி. 5:30, 31).