தர்சு (Tarsus)
இது தென்கிழக்காசியாவில், சிலிசியாவிலுள்ள ஒரு முக்கிய பட்டணம் (அப். 21:39). அங்கே விசேஷ பாடசாலைகள் இருந்தன. பவுலின் பிறப்பிடமும் இதுவே (அப். 22:3).
பவுல் குணப்பட்டபின், எருசலேமில் அவனுக்குத் துன்புறுத்தல் உண்டானபோது, கிறிஸ்தவர்கள் அவனைத் தர்சுவுக்கு அனுப்பி விட்டார்கள் (அப். 9:30). பின்பு பர்னபா தர்சுவுக்குப் போய் அந்தியோகியாவுக்குப் பவுலைக் கூட்டிக்கொண்டு போனான் (அப். 11:25).
பவுல் தனது இரண்டாம் பிராயாணத்திலும், இந்த இடத்துக்குப் போனதாகத் தெரிகிறது (அப். 15:41).