« Back to word list

தெக்கோவா (Tekoah)

(நிலையான)

1. யூதேயாவிலிருந்த ஒரு பட்டணம். பெத்லகேமுக்குத் தெற்கே ஆறு மைல் தூரத்திலுள்ளது. ஆமோஸ் தீர்க்கதரிசன ஊழியத்துக்குப் போகும் முன் இவ்வூரில் இருந்தான் (ஆமோஸ் 1:1). அப்சலோமைத் தாவீதோடு ஒப்புரவாக்கும்படி யோவாப் இவ்வூரிலிருந்த புத்தியுள்ள ஒரு ஸ்திரீயை அழைப்பித்தான் (2 சாமு. 14:2). ரெகொபெயாம் தேசம் இரண்டாகப் பிரிந்தபின், இங்கே அரணிப்பான பட்டணத்தைக் கட்டினான் (2 நாளா. 11:6). சத்துரு வருகிறானென்று தெக்கோவாவில் எக்காளம் ஊதுங்கள் என்று எரேமியா சொன்னான் (எரே. 6:1).

நெகேமியாவின் நாள்களில் தெக்கோவா ஊரார் அலங்கத்தைப் பழுது பார்த்துக் கட்டினார்கள் (நெகே. 3:5-27).

2. யூதாவின் பேரனாகிய எஸ்ரோனின் சந்ததியானான தெக்கோவா (1 நாளா. 2:24; 4:5).

« Prev 335 / 564 Next »