« Back to word list

தோவேக்கு (Deog)

சவுலுடைய மேய்ப்பரில் பிரதானியான ஓர் ஏதோமியன். தாவீது சவுலுக்குத் தப்பி, நோபிலிருந்த அகிமெலேக்கினிடம் போன வேளையில், இவனும் அங்கே இருந்தான். அகிமெலேக்கு தாவீதோடு சிநேகமாயிருந்தானென்று, இவன் பின்பு சவுலுக்கு அறிவித்தான். சவுல் அகிமெலேக்கு சதி செய்தானென்று அவனில் குற்றம் பிடித்து, தன் காவலாளரிடம் அவனையும், மற்ற ஆசாரியர்களையும் கொல்லும்படி சொல்லியும், அவர்கள் செய்யாதபோது, தோவேக்கு ஆசாரியர் 85 பேரை அன்றே கொன்றான். இன்னும் நோபிலுள்ள புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், ஆடு, மாடுகளையும் பட்டயக் கருக்கினால் வெட்டிப்போட்டான் (1 சாமு. 22:7-19).

52ஆம் சங்கீதத்தின் தலைப்பில் இவனுடைய பெயர் சொல்லப் பட்டுள்ளது.

« Prev 349 / 564 Next »