பாரேஸ் (Parez)
(மீறி வருதல்)
யூதாவும், தாமாரும் பெற்ற இரட்டைப் பிள்ளைகளில் ஒருவன். பிரசவ வேளையில் இவன் முந்திப் பிறந்ததினால் இப்பெயர் கொடுக்கப்பட்டது (ஆதி. 38:29). மற்றப் பிள்ளையின் பெயர் சேரா. பாரேசின் சந்ததியார் பாரேசியர் எனப்பட்டார்கள் (எண். 26:20). இந்தச் சந்ததியில் தாவீதும், பின்பு மேசியாவும் பிறந்தார்கள் (1 நாளா. 9:4; ரூத். 4:18; மத். 1:3; லூக்கா. 3:33).