பார்வோன் (Pharaoh)
எகிப்து பாஷையில், இந்தச் சொல்லின் அர்த்தம் "பெரிய வீடு" அல்லது "அரண்மனை”. பிற்பாடு அரண்மனையிலிருக்கும் இராஜாவைக் குறித்தது. "பார்வோன்" அத்தேச இராஜாக்களுக்குக் கொடுக்கப்பட்ட பொதுவான பெயர்.
1. ஆபிரகாம் காலத்துப் பார்வோன் : ஆபிரகாம் கி.மு. 1900 வருடத்தில் எகிப்துக்குப் போனபோது இருந்த பார்வோன் (ஆதி. 12:15-20).
2. யோசேப்பின் காலத்துப் பார்வோன் : இவன் கி.மு. 1700 இல் இருந்த பார்வோன் (ஆதி. அதி.37-50)
3. இஸ்ரவேலர் ஒடுக்கப்பட்ட காலத்துப் பார்வோன் (யாத். 1-2 அதி). பல இராஜாக்கள் இருந்திருக்கலாம்.
4. யாத்திராகம காலத்துப் பார்வோன் : கி.மு. 1340-1306 (யாத். அதி 5-12). இவன் இரண்டாம் ராமசேஸ் எனப்பட்டான்.
5. யூதா கோத்திரத்து மேரேத்தின் மனைவியாகிய பித்தியாளின் தகப்பன் (1 நாளா. 4:18).
6. ஏதோமியனான ஆதாத்துக்கு ஒதுக்கிடம் கொடுத்து, பின் தன் மனைவியின் சகோதரியை விவாகம் செய்து கொடுத்தவன் (1 இரா. 11:18-20).
7. சாலொமோனுடைய மாமனாகிய பார்வோன். கேசேர் பட்டணத்தைத் தன் மகளுக்குச் சீதனமாய்க் கொடுத்தான் (1 இரா. 9:16).
8.பார்வோன் - சீஷாக்
9. ஓசியா இராஜா காலத்துப் பார்வோன்.
10. எத்தியோப்பிய பார்வோன்.
11. பார்வோன் நேகோ. (எரே. 25:19).
12. பார்வோன் ஒப்பிரா (எரே. 37:5-11; எசே. 17:7).