பாலாக் (Balak)
(பாழாக்குவோன்)
இவன் மோவாபிய இராஜா. சிப்போரின் குமாரன். இஸ்ரவேல் தங்கள் பிரயாணத்தின் போது, மோவாபின் வெளிகளில் பாளயமிறங்கினார்கள். பாலாக் இதைக் கண்டு, அவர்களைச் சபிக்கும்படி, பிலேயாமை அழைத்தான். ஆனாலும் கர்த்தர் அவன் சாபத்தை ஆசீர்வாதமாக மாற்றினார் (எண். அதி 22-.24; யோசுவா. 24:9; நியா. 11:25; மீகா. 6:5; வெளி. 2:14).