பினெகாஸ் (Phinehas)
இவன் ஆரோனுடைய பேரன். எலெயாசாரின் மகன் (யாத். 6:25). இஸ்ரவேல் சித்தீமில் பாகால்பேயோரைப்பற்றிக் கொண்டு, வேசித்தனம் செய்த நாள்களில் இவன் அப்படிப் பாவம் செய்த ஒரு இஸ்ரவேலனையும் மீதியானிய ஸ்திரீயையும் கொன்று போட்டான் (எண். 25:6-18; சங். 106:30,31). பின்பு மோசே மீதியானியருக்கெதிராக ஒரு படையை அனுப்பினபோது, பினெகாசின் கையில் பூரிகைகளைக் கொடுத்தனுப்பினான் (எண். 31:6). யோர்தானின் ஓரத்தில் ஒரு பலிபீடம் கட்டின விஷயத்தில், சமாதான முண்டாக்கினவர்களில் இவனுமொருவன் (யோசுவா 22:9-32). நியாயாதிபதிகளின் நாள்களில் இவன் ஆசாரியனாயிருந்தான் (நியா. 20:28). எஸ்றா இவன் சந்ததியான் (எஸ்றா. 7:5).
இவனுடைய தகப்பன் மரித்தபோது, தனக்குக் கிடைத்த மேட்டில் அவனை அடக்கம் பண்ணினான் (யோசுவா. 24:33).
2. ஏலியுடைய இரண்டு குமாரரில் ஒருவன். துஷ்ட நடத்தையுள்ளவன் (1 சாமு. 1:3; 2:12-17). பின்பு ஆப்பெக்கில் நடந்த யுத்தத்தில் உடன்படிக்கைப் பெட்டி பிடிக்கப்பட்டபோது, இவனும் கொல்லப்பட்டான் (1 சாமு. 4:4-19).
கர்ப்பவதியாயிருந்த இவனுடைய மனைவி இந்தச் செய்தியைக் கேட்டவுடன் மரித்தாள்.
3. எஸ்றாவோடு சிறையிருப்பிலிருந்து வந்த எலியேசர் என்பவனின் தகப்பன் (எஸ்றா.8:33).