« Back to word list

பேயோர் (Peor)

(மலை பிளப்பு)

1. மோவாபிய தேசத்திலுள்ள ஒரு கொடுமுடி. இஸ்ரவேலைச் சபிக்கும்படி பாலாக் பிலேயாமைக் கூட்டிக்கொண்டு போன மூன்று கொடுமுடிகளில் கடைசியானது (எண். 23:28; 24:3).

2. மோவாபியர் சேவித்த ஒரு தேவனின் பெயர். இஸ்ரவேலரும் இந்த வணக்கத்தைப் பின் பற்றினார்கள். பாகால் பேயோரென்றும்

சொல்லப்பட்டது (எண். 25:3; 31:16; யோசுவா. 22:17).

பாகால் பேயோர்

சீத்தீமில் இஸ்ரவேலர் மோவாபின் குமாரத்திகளோடு வேசித்தனம் பண்ணி, பாகால் பேயோரைப் பற்றிக் கொண்டார்கள் (எண். 25:1-3; 31:16; உபா. 4:3; ஓசியா. 9:10).

« Prev 430 / 564 Next »