« Back to word list

பேலிக்ஸ் (Felix)

(பாக்கியமுள்ள)

கிலவதியு இராயனின் நாள்களில், இவன் யூதேயாவின் தேசாதிபதி (அப். 23:6), சீர்கெட்ட, ஒரு கொடூர அதிகாரி எனப்பட்டான்.

ஒரு தடவை இவன் யூத ஸ்திரீயாகிய தன் மனைவி துருசில்லா ளுடன் பவுலை நியாயம் விசாரித்தான். அவனுடைய பிரசங்கத்தி னால் இவன் உணர்த்தப்பட்டும். யூதரைப் பிரியப்படுத்தும் நோக்கமாயும், பவுலிடம் கை இலஞ்சம் பெறும் எண்ணத்தோடும், அவனைக் காவலில் போடுவித்தான். பவுல் இரண்டு வருடம் காவலில் இருந்தான் (அப். 24:24-27).

எட்டு வருடங்களுக்குப் பின் பேலிக்ஸ் ரோமாபுரிக்கு அனுப்பப் பட்டு, பெஸ்து தேசாதிபதியானான். பேலிக்ஸ் யூதேயாவில் செய்த தப்பிதங்களுக்காகத் தண்டிக்கப்படாமல் அவனுடைய சகோதரன் அவனுக்காக இராயனுடன் பரிந்து பேசினதினிமித்தம் தப்பிக் கொண்டான்.

« Prev 431 / 564 Next »