பொவனெர்கேஸ் (Boanerges)
(இடி முழக்க மக்கள்)
இயேசு அப்போஸ்தலரைத் தெரிந்துகொண்ட சமயத்தில் சகோதரராகிய யாக்கோபு, யோவான் என்பவர்களின் வேகமும், வைராக்கியமுமான தன்மையினிமித்தம் இடிமுழக்க மக்கள் என்று அர்த்தம் கொள்ளும் “பொவனெர்கேஸ்" என்று பெயரிட்டார் (மாற்கு. 3:17). பிற்பாடு அவர்களில் இருந்த ஆவியைக் குறித்து இயேசு அவர்களை அதட்டினார் (லூக்கா. 9:54).