« Back to word list

மீகா (Micah)

எப்பிராயீம் தேசத்தானாகிய மீகா ஒரு சுரூபத்தையும். விக்கிரகத்தையும் உண்டுபண்ணி, தன் வீட்டில் வைத்திருந்தான். பின்பு ஒரு லேவியனாகிய வாலிபனைப் பிரதிஷ்டைபண்ணி ஆசாரியனாக்கினான் (நியா. 17:1-13).

தாண் கோத்திரத்தாரில் சிலர் சுதந்தரம் தேடிப்போய், இந்த வாலிபனிடம் விசாரித்தபோது, அவன் அவர்கள் பிரயாணம் வாய்க்கும் என்றான். அப்படியே அவர்கள் லாயீசுக்குப் போய், தேசத்தைப் பார்த்துத் திரும்பிப் போனார்கள். (நியா. 18:1-8). பின்பு அவர்கள் 600 பேரோடு புறப்பட்டுப்போய், மீகா வீட்டில் இருந்த சுரூபங்களையும் எடுத்து, ஆசாரியனையும் கூட்டிக்கொண்டுபோய், லாயீசைப் பிடித்து, தங்கள் தேசமாக்கினார்கள். மனாசேயின் சந்ததியானாகிய யோனத்தானும், அவன் குமாரரும் அவர்களுக்கு ஆசாரியராய் இருந்தார்கள் (நியா. 18:10-31).

தாண் கோத்திரத்தில் சுரூப வணக்கம் இவ்விதமாய்த் துவங்கிற்று.

மீகா (Mica)

1. மேவிபோசேத்தின் குமாரன் (2 சாமு. 9:12; 1 நாளா. 8:34).

2. மீகா ரூபன் கோத்திரத்தான் (1 நாளா. 5:5).

3. கோகாத்தியனான ஊசியேலின் குமாரன் (1 நாளா. 23:20).

4. உடன்படிக்கைக்கு முத்திரைபோட்ட லேவியன் (நெகே. 10:11).

மீகா தீர்க்கதரிசி

மொரேசா ஊரானாகிய மீகா. சிறிய தீர்க்கதரிசிகளில் ஒருவன். யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்பவர்களின் நாள்களில் தீர்க்கதரிசனம் கூறினான் மீகா 1:1; எரே. 26:18. (கி.மு. 740-700). இவனைப்பற்றி வேறொன்றும் சொல்லப்படவில்லை. வட, தென், இராஜ்யங்களின் தலைநகராகிய சமாரியா, எருசலேம் பட்டணங்களுக்கு விரோதமாகக் கண்டிப்பான தீர்வை வருமென்று கூறினான்.

ஆமோசைப்போல ஜனங்களின் அநியாயங்களைக் குறித்துக் கண்டித்தான் (மீகா. 2:1-3; 3:1-4, 11).

« Prev 464 / 564 Next »