« Back to word list

மீகாள் (Michal)

(தேவனைப்போல உள்ளது யார்?)

இவள் சவுலின் இளைய குமாரத்தி (1 சாமு. 14:49). தாவீதை நேசித்தாள் (1 சாமு. 18:20). பின்பு தாவீது பெலிஸ்தரில் இருநூறு பேரின் நுனித்தோலை கொடுத்து, அவளை விவாகம் செய்தான் (1 சாமு. 18:27). சவுல் தாவீதைக் கொன்றுபோட எத்தனித்த போது, இவள் அவனைத் தப்புவித்தாள் (1 சாமு. 19:11-17). தாவீது ஒளிந்துத் திரிந்த நாள்களில் சவுல் மீகாளை லாயீசின் குமாரனாகிய பல்த்திக்குக் கொடுத்தான் (1 சாமு. 25:44).

சவுல் மரித்தபின், அப்னேர் தாவீதோடு உடன்படிக்கை செய்யப்போன சமயத்தில் தாவீது மீகாளை மறுபடியும் தனக்கு மனைவியாக எடுக்க வேண்டுமென்று கேட்டதினிமித்தம் பல்த்தியேலிடமிருந்து அவளைப் பலாத்காரமாய் எடுத்து, அப்னேர் தாவீதிடம் கொண்டுபோனான் (2 சாமு. 3:14-16).

கர்த்தருடைய பெட்டியைத் தாவீது எருசலேமுக்குக் கொண்டுவரும்போது நடனம் பண்ணினான். இதைப் பார்த்திருந்த மீகாள் அவனை நிந்தித்ததினிமித்தம் அவள் மரணமடையும்வரை பிள்ளையில்லாதிருந்தாள் (2 சாமு. 6:20-23).

(2 சாமு. 21:8)இல் காண்கிற மீகாள் இவள் அல்ல என்று தெரிகிறது.

« Prev 465 / 564 Next »