மெராரி (Merari)
(கசப்பு)
லேவியின் மூன்றாம் மகன். இவனுடைய பெயரும், சகோதரரான கெர்சோன், கோகாத் என்பவர்களின் பெயரும் ஒருமித்துச் சொல்லப்பட்டுள்ளன (ஆதி. 46:11; யாத். 6:16). இவன் யாக்கோபோடு எகிப்துக்குப் போன எழுபது பேரில் ஒருவன் (ஆதி. 46:8,11).
மெராரியர் இவனுடைய சந்ததியார் (எண். 26:57).