மெராரியர் (Merarites)
லேவியரின் குடும்பங்கள் - கெர்சோன், கோகாத், மெராரி என்னும் மூன்று பிரிவுகளாயிருந்தன (எண். 26:57).
வனாந்தரப் பிரயாணத்தில் மெராரி ஆசரிப்புக் கூடாரத்தின் வடபக்கத்தில் பாளயமிறங்கினார்கள்.
மெராரியின் குமாரர் மகேலி, மூசி என்பவர்களின் பணி காவல் விசாரிப்பும், வாசஸ்தலத்தின் பணிமுட்டுகளும், அதற்கடுத்தவைகளுமே (எண். 3:20; 35:37; 4:31-33; 7:8). பிரயாணத்தில் மெராரி புத்திரர் வாசஸ்தலத்தைச் சுமந்து கொண்டு போனார்கள் (எண். 10:17).
கானான் தேசத்தில் அவர்களுக்குப் பன்னிரெண்டு பட்டணங்கள் கொடுக்கப்பட்டன (யோசுவா. 21:7,40).
கர்த்தரைத் துதிக்கிறவர்களாகத் தாவீது, கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்களுடைய வம்சப் பிரிவுகளின்படி வகுத்தான் (1நாளா. 23:6; 21-23).
எசேக்கியாவின் நாள்களிலும் யோசியாவின் நாள்களிலும் அவர்கள் ஆலயத்தைச் சுத்திகரிக்கும் வேலையில் உதவி செய்தார்கள் (2 நாளா. 29:12; 34:12).
மெராரியின் புத்திரரில் சிலர் எஸ்றாவோடு எருசலேமுக்குப் போனார்கள் (எஸ்றா. 8:19).