யோசுவா (Joshua)
(கர்த்தர் இரட்சிப்பு)
எப்பிராயீம் கோத்திரத்துத் தலைவனாகிய எலிஷாவின் பேரன். நூன் என்பவனின் மகன் (1 நாளா. 7:27; எண். 1:10). இவனுடைய பெயர் ஓசேயா என்று எண். 13:8இல் குறித்துள்ளது.
வனாந்தர பிரயாண நாள்களில் யோசுவா வாலிபனாயும்
மோசேயின் பணிவிடைக்காரனாயுமிருந்தான் (யாத். 33:11). அமலேக்கோடு நடந்த யுத்தத்தில், யோசுவா முன்சென்று அவர்களை முறிய அடித்தான் (யாத். 17:13).
கானான் தேசத்தைச் சுற்றிப் பார்க்கப் போனவர்களில், இவன் எப்பிராயீம் கோத்திரத்துப் பிரதிநிதியாயிருந்து திரும்பி வந்து, இவனும் காலேபும் தேசத்தை ஜெயிக்கக்கூடும் என்று சொல்லி, ஜனங்களைத் தைரியப்படுத்தினார்கள் (எண். 14:8,9).
மோசே சீனாய் மலைமேல் ஏறி கர்த்தர் சமூகத்தில் தங்கி யிருக்கையில் இவன் மலையடிவாரத்தில் காத்திருந்தான் (யாத். 24:13).
கர்த்தரின் சொற்படி, மோசே யோசுவாவைத் தெரிந்து கொண்டு, அவன் மேல் தன் கைகளை வைத்து, இஸ்ரவேலர் எல்லாரும் அவனுக்குக் கீழ்ப்படியும்படி, கட்டளை கொடுத்தான் (எண். 27:18-23).
மோசே மரித்தபின், யோசுவா இஸ்ரவேலரை வழி நடத்தி, யோர்தானைக் கடந்து, கானான் தேசத்தைக் கைப்பற்றி கோத்திரங்களுக்குப் பிரித்துக் கொடுத்தான்.
யோசுவா வயது சென்று முதிர் வயதானபோது, ஜனங்க ளெல்லாரையும் சீகேமில் கூடி வரச்செய்து, தனது கடைசி வார்த்தை களையெல்லாம் சொன்னான். அவைகளை எழுதி, ஒரு கல்லை நிறுத்தி அது அவர்களுக்கு சாட்சியாயிருக்குமென்று சொல்லி ஜனங்களை அவரவர் சுதந்தரத்துக்கு அனுப்பிவிட்டான் (யோசுவா. 24:21,28).
யோசுவா 110 வயதுள்ளவனாய் மரணமடைந்தான். அவனை அவன் சுதந்தர பாகத்தில் அடக்கம் பண்ணினார்கள் (யோசுவா. 24:29,30).
யோசுவாவின் புத்தகம் அவனால் எழுதப்பட்டதொன்றல்ல, அவனுடைய ஜீவியமும் செயலும் அதிலே விவரித்துள்ளன என்பதே அதன் கருத்து.
2. யோசுவா : இவன் பெத்ஷிமேஸ் ஊரான். பெலிஸ்தர் கர்த்தருடைய பெட்டியை ஒரு வண்டியில் வைத்து அனுப்பின போது, அது இவனுடைய வயலில் வந்து நின்றது. அங்கே ஒரு பெரிய கல்லிருந்தது. பெட்டியை அதன்மேல் வைத்தார்கள் (1 சாமு. 6:14, 18).
3. யோசியா இராஜாவின் நாள்களிலிருந்த எருசலேம் பட்டணத் தலைவன் (2 இரா. 23:8).
4. செருபாபேலின் நாள்களிலிருந்த பிரதான ஆசாரியன் (ஆகாய்.1:1, சக. 3:1-10).