யோப்பா (Joppa)
(அழகிய)
கர்மேலுக்கும் பலஸ்தீனாவின் தென் பாகத்துக்கும் இடையில், மத்திய தரைக்கடலோரத்திலுள்ள ஓர் இயற்கை துறைமுகமுள்ள பட்டணம். இது யாப்போ என்றும் சொல்லப்பட்டுள்ளது (யோசுவா. 19:46).
சாலொமோனின் நாள்களில் தீருவின் இராஜா, லீபனோனிலே மரங்களை வெட்டி, கடல் வழியாக யோப்பா மட்டும் கொண்டு வந்தான் (2 நாளா. 2:16).
யோனா, கர்த்தரின் சமூகத்திலிருந்துத் தப்பி ஒடி, தர்ஷீசுக்குப் போகும்படி, யோப்பாவில் கப்பல் ஏறினான் (யோனா. 1:3).
எஸ்றாவின் நாள்களிலும் தேவாலயம் கட்டுகிறதற்காக, கேதுரு மரங்களை லீபனோனிலிருந்து யோப்பாவுக்குக் கொண்டு வந்தார்கள் (எஸ்றா. 3:7).
பேதுரு லித்தாவிலிருந்து, யோப்பாவுக்கு வந்து, தொற்காளை உயிர்த்தெழுப்பினான் (அப். 9:36). பேதுருவுக்கு, ஒரு விசேஷமான தரிசனம் கிடைத்ததும் இங்கேயே (அப். 10:9-16).
பிற்காலங்களில் காலத்துக்குக் காலம், வெவ்வேறு ஜாதிகள் இந்தப் பட்டணத்தை ஆண்டார்கள்.
தற்போது, இது தெல்அவீவ் என்ற துறைமுகத்தைச்
சேர்ந்ததாயிருக்கிறது.