« Back to word list

யோயாக்கீன் (Jehoiachin)

(கர்த்தர் ஏற்படுத்தினார்)

எகோனியா, கோனியா என்பது இவனுடைய மறு பெயர்கள் (1 நாளா. 3:16; எரே. 24:1). இவனுடைய தகப்பன் யோயாக்கீம் மரித்த பின், இவன் பதினெட்டாம் வயதில் இராஜாவாகி, மூன்று மாதம் பத்து நாள் மாத்திரம் அரசாண்டான் (2 இரா. 24:8; 2 நாளா. 36:9).

பாபிலோன் இராஜாவாகிய நேபுகாத்நேச்சார், யூதேயாவை முற்றுகைப் போட்டபோது அவனை எதிர்த்துப் போவதில் பலனில்லையென்று கண்டு, தன்னை ஒப்படைத்தான். பாபிலோன் இராஜா அவனையும் பதினாயிரம் பேரையும் சிறைப்பிடித்துக்கொண்டு போனான் (2 இரா. 24:14). இவ்விதமே கி.மு. 597இல் இஸ்ரவேலின் சிறையிருப்புத் தொடங்கிற்று. கி.மு. 561இல் நேபுகாத்நேச்சாரின் மரணம் வரைக்கும், யோயாக்கீன் சிறைப்பட்டிருந்தான். ஏவில் மெரோதாக் இராஜாவானபோது, அவனை விடுதலை பண்ணி, உயர்ந்த சிங்காசனத்தில் வைத்து, தன்னுடைய விருந்தாளிபோல் நடத்தினான் (2 இரா. 25:27-30).

அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் அப்படிச் செய்யப்பட்டது (எரே. 52:31-34).

« Prev 519 / 564 Next »