யோய்தா (Jehoiada)
(கர்த்தர் அறிவார்)
1. யோய்தாவின் குமாரனாகிய பெனாயா கிரேத்தியருக்கும் பிலேயத்திற்கும் தலைவன் (2 சாமு. 8:18).
2. பெனாயாவின் குமாரன் யோய்தா தாவீதின் ஆலோசனைக் காரனாகிய அகித்தோப்பேலுக்கு உதவியாயிருந்தான் (1 நாளா. 27:34).
3. யூதா இராஜாவாகிய அகசியா மரணமடைந்தபின், அவனுடைய தாயாகிய அத்தாலியாள் அரசாண்டபோது பிரதான ஆசாரியனாயிருந்த யோய்தா (2 இரா. 11:1-4). இவன் அகசியா இராஜாவின் சகோதரியாகிய யோகேபாளை விவாகம் செய்தான். அத்தாலியாள் இராஜ குடும்பத்தாரை எல்லாம் கொன்றபோது, அகசியாவின் இளைய மகனாகிய யோவாசை இவர்கள் களவாய் எடுத்து பாதுகாத்து ஆறு வருடங்களின் பின், அவனை இராஜாவாக்கினார்கள் (2 இரா. 11:4-16). யோய்தாவின் ஆலோசனையைக் கேட்ட நாளெல்லாம், யோவாஸ் செம்மையாய் நடந்தான் (2 இரா. 12:1-3).
4. எரேமியாவின் நாள்களிலிருந்த யோய்தா (எரே. 29:26).
5. எருசலேமின் வாசலைப் பழுது பார்த்தவர்களில் ஒருவன் (நெகே.3:6).