« Back to word list

யோராம் (Joram)

(கர்த்தர் உயர்த்தப்பட்டார்)

1. ஆகாப், யேசபேல் என்பவர்களின் மகன். இவனுடைய தமையன் அகசியா இராஜா பிள்ளையில்லாமல் மரித்தபடியால் இவன் இஸ்ரவேலின் இராஜாவானான் (கி.மு. 852-841). இவனுடைய நாள்களில் சீரியாவோடு யுத்தம் நடந்தது. மோவாபும் இவனுக்கு விரோதமாக கலகம்பண்ணினார்கள். இவன் யூதா இராஜாவாகிய யோசபாத்துடன் சேர்ந்து மோவாபியருக்கெதிராக யுத்தம் செய்து, அவர்களைத் தோற்கடித்தான்.

இவன் யெஸ்ரயேலுக்குப் போயிருந்த சமயத்தில், யெகூ எனபவன் கலகம்பண்ணி, அவனை அம்பினால் எய்து கொன்றான். அவனுடைய சரீரம் நாபோத்தின் வயல் நிலத்தில் எறிந்துவிடப் பட்டது (2 இரா. 1:1; 9:21-26).

எலிசா தீர்க்கதரிசி இவனுடைய நாள்களில் ஊழியம் செய்தான். ஆகிலும் யோராம், பாகால் வணக்கத்தை முற்றாய் விட்டுவிடவில்லை (2 இரா. 3:3).

2. யூதாவின் இராஜா (கி.மு. 848-842). யோசபாத்தின் மகன் (2 இரா. 8:16-24; 2 நாளா. 21:1-20). இவன் ஆகாப் இராஜாவின் குமாரத்தியை விவாகம் செய்து, அவர்களைப்போல் பொல்லாப் பானதைச் செய்தான். இவன் தன் சகோதரர் ஆறு பேரைக் கொன்றான்.

இவனுக்கு வரும் தேவ தண்டனையைப்பற்றி எலியா தீர்க்கதரிசி இவனுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தான். அப்படியே அவன் கொடிய குடல் நோயினால் வாதிக்கப்பட்டு, இரண்டு வருடம் முடிகிற காலத்தில் விரும்புவாரில்லாமல் இறந்து போனான் (2 நாளா. 21:12-20).

3. யோராம் (Jehoram)) : ஆசாரியனான யோராம், யோசபாத் இராஜாவால், ஜனங்களுக்குப் போதிக்கும்படி இவனும் அனுப்பப் பட்டான் (2 நாளா. 17:8).

4. யோராம் தோயீயின் மகன். இவன் தாவீதின் சுகசெய்தியை விசாரிக்கவும், வாழ்த்துதல் சொல்லவும் அவனிடம் அனுப்பப் பட்டான் (2 சாமு. 8:10). இவனுடைய பெயர் அதோராம் என்று சொல்லப்பட்டுள்ளது (1 நாளா. 18:10).

5.தாவீதின் நாள்களிலிருந்த ஒரு லேவியனுடைய பெயர் (1 நாளா. 26:25) யோசபாத் என்றும் குறித்துள்ளது (2 நாளா.35:9).

« Prev 522 / 564 Next »