« Back to word list

யோவாகாஸ் (Jehoahaz)

1. இஸ்ரவேலின் இராஜாவாகிய யெகூவின் மகன். அவன் ஸ்தானத்தில் இவன் இராஜாவானான் (2 இரா. 10:35). கி.மு. 817இல் தகப்பனோடு ஆளத் தொடங்கி, 17 வருடம் அரசாண்டான் (2 இரா.13:1). இவன் கர்த்தரின் பார்வையில் பொல்லாப்பானதைச் செய்ததினிமித்தம், கர்த்தர் சீரியாவின் இராஜாவாகிய ஆசகேலின் கையிலும், அவனுடைய குமாரனாகிய பெனாதாத்தின் கையிலும், இஸ்ரவேலை ஒப்புக்கொடுத்தார். யோவகாஸ் கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினபோது, சிறுசகாயம் கிடைத்தது. இவன் மரித்து, சமாரியாவில் அடக்கம் பண்ணப்பட்டான் (2 இரா. 13:2,9).

2. யூதா இராஜாவாகிய யோசியாவின் குமாரரில் ஒருவன். யோசியா மரித்தபின் ஜனங்கள் அவனை, 23 வயதாயிருக்கையில், இராஜாவாக்கினார்கள். மூன்று மாதங்களின் பின், எகிப்தின் இராஜாவாகிய பார்வோன் நேகோ அவனைப் பிடித்து ரிப்லாவுக்குக் கொண்டு போய், எகிப்துக்கு அனுப்பி வைத்தான். அங்கே அவன் மரித்தான். நேகோ யோசியாவின் குமாரனாகிய எலியாக்கீமை இராஜாவாக்கி, அவன் பெயரை யோயாக்கீம் என்று மாற்றினான் (2 இரா. 23:30-34; 2 நாளா. 36:1-4).

யோவகாஸ், சல்லூம் என்றும் அழைக்கப்பட்டான் (1 நாளா. 3:15; எரே. 22:10-12).

3. யூதா இராஜாவாகிய யோராமின் இளைய மகன் (2 நாளா.21:17).

« Prev 524 / 564 Next »