« Back to word list

லாமேக்கு (Lamech)

1. மெத்தூசவேலின் மகன். காயீனுடைய சந்ததியான். இவனுக்கு ஆதாள், சில்லாள் என்று இரண்டு மனைவிகளிருந்தார்கள். ஆதாள், யாபால், பூபால் என்று இரண்டு குமாரரைப் பெற்றாள். சில்லாள், தூபால்-காயீனைப் பெற்றாள். அவளுக்கு நாமாள் என்னும் ஒரு குமாரத்தியுமிருந்தாள் (ஆதி. 4:18-24).

தூபால்-காயீன், பித்தளை இரும்பு முதலியவற்றில் வேலை செய்கிறவர்களுக்கு ஆசாரியனானான்.

லாமேக்கு தன் மகன் செய்த ஆயுதங்களைக் குறித்து, பெருமை பாராட்டி, அவைகளால்தான் ஆள்களைக் கொன்றதாகத் தன் மனைவிகளிடம் வீம்பு பேசினான். ஆகவே தேவனுடைய பாதுகாப் பில்லாமல், தானே தன்னைக் காத்துக்கொள்ளக்கூடும் என்பதையும் கருதினான் (ஆதி. 4:23-24).

2. தேசத்தின் சந்ததியானான மெத்தூசலாவின் மகன். இவன் நோவாவின் தகப்பன் (ஆதி 5:25, 28-31).

« Prev 548 / 564 Next »