« Back to word list

லோத்து (Lot)

லோத்து ஆரானின் மகன். ஆரான் ஆபிராமின் சகோதரன். ஆபிராம் தேராகின் மகன் (ஆதி. 11:27).

தேராகு ஆபிராமையும், அவன் மனைவி சாராயையும், லோத்தையும் அழைத்துக் கொண்டு, ஊர் என்ற தேசத்திலிருந்துக் கானானுக்குப் போக புறப்பட்டு ஆரானுக்கு வந்தபோது, அங்கே தங்கினார்கள். சில நாள்களுக்குப் பின், தேராகு மரித்தான் (ஆதி. 11:31).

பின்பு ஆபிராம் லோத்தைக் கூட்டிக்கொண்டு கானானுக்குப் போய், அங்கிருந்து எகிப்துக்குப் போய், சில நாள்களில் பின் திரும்பி வந்து பெத்தேலில் வாசம்பண்ணினார்கள் (ஆதி. 12:4; 13:1-3).

ஆபிராமுடைய மந்தை மேய்ப்பருக்கும், லோத்துடைய மந்தை மேய்ப்பருக்குமிடையில் வாக்கு வாதம் உண்டானதினிமித்தம், இருவரும் பிரிய வேண்டி வந்தது. லோத்து யோர்தானுக்கு அருகான சமபூமியைத் தெரிந்து கொண்டு, அங்கே போய், சோதோமுக்கு நேரே கூடாரம் போட்டான். சோதோமின் ஜனங்கள் பொல்லாதவர்களா யிருந்தார்கள் (ஆதி.13:10-13).

அந்தப் பகுதிகளிலிருந்த இராஜாக்களுக்கிடையில் யுத்தம் உண்டாயிற்று.

சோதோமின் ஜனங்கள் தோற்கடிக்கப்பட்டு, லோத்தும் சிறையாகக்கொண்டு போகப்பட்டான். எமோரியாவின் சமபூமியில் குடியிருந்த ஆபிராம் அதைக் கேள்விப்பட்டு, தன் வேலைக்காரரோடு பின் தொடர்ந்து போய், அந்த இராஜாக்களை மடங்கடித்து, லோத்தையும் அவனுக்குள்ள எல்லாவற்றையும் திருப்பிக் கொண்டு வந்தான் (ஆதி. 14:1-6).

பிற்பாடு சோதோம் கொமோரா அழிக்கப்பட்டபோது கர்த்தர் ஆபிராமின் வேண்டுதலினிமித்தம் லோத்தையும் மனைவியையும் இரண்டு குமாரத்திகளையும் தப்பவைத்தார். ஆனால் லோத்தின் மனைவி பின்னிட்டுப் பார்த்து உப்புத் தூண் ஆனாள் (ஆதி. 19:15-26).

பின்பு லோத்தும் அவன் குமாரத்திகளும் மலையிலே வாசம் பண்ணினார்கள். மூத்தவள் ஒரு குமாரனைப்பெற்று, "மோவாப்" என்று பேரிட்டாள். இளையவள் ஒரு குமாரனைப் பெற்று, “பென்னமி" என்று பேரிட்டாள். இவர்களுடைய சந்ததியார் மோவாபியர், அம்மோனியர் எனப்பட்டார்கள் (ஆதி. 19:38).

இந்த இரண்டு சாதியாரும் பிற்காலங்களில் இஸ்ரவேலருடைய கொடிய எதிரிகளானார்கள்.

இயேசு தமது இரண்டாம் வருகையைப்பற்றிப் பேசின தருணத்தில், லோத்தினுடைய நாள்களைப்பற்றியும், லோத்தின் மனைவிக்கு நடந்ததைப் பற்றியும் உதாரணமாகவும், எச்சரிப்பாகவும் கூறினார் (லூக்கா.17:28-32).

நீதிமானாகிய லோத்தைக் கர்த்தர் இரட்சித்தார் என்று பேதுரு சொல்லுகிறான் (2 பேதுரு 2:8).

« Prev 559 / 564 Next »