« Back to word list

வலுசர்ப்பம் (Dragon)

இந்தப் பெயர் மிகுதியாய் ஒரு ஊளையிடுகிற காட்டு மிருகத்தைக் குறிக்கிறது. பழைய ஏற்பாட்டில் "மலைப்பாம்பு" என்று யோபு 30:29லும், “வலுசர்ப்பம்" என்று சங். 44:18; ஏசாயா. 13:22; 34:13; 35:7; எரே. 10:22; 49:33லும் கூறியுள்ளது.

முதலை என்ற கருத்தோடு பார்வோனைக் குறிக்கிறது (எசே. 29:3).

வலுசர்ப்பம் என்று நேபுகாத்நேச்சாரைக் குறிக்கிறது (எரே. 51:34).

புதிய ஏற்பாட்டில், சாத்தான் வலு சர்ப்பம் அழைக்கப்படுகிறான் என்று

ஏழு தலைகளையும், பத்துக் கொம்புகளையும், தலைகளின் மேல் ஏழு முடிகளையுமுடைய சிவப்பான பெரிய வலுசர்ப்பம் வானத்தில் காணப்பட்டது (வெளி. 12:3-9). சிவப்பு இரத்தத்தையும், கொம்புகள் வல்லமையையும் கருதுகிறது. இதில் கடைசி நாள்களில் உலகத்தி லுள்ள தேவனுடைய ஜனங்களைச் சாத்தான் துன்புறுத்துவான் என விளங்குகிறது.

பின்பு ஒரு தூதன் வானத்திலிருந்திறங்கி வந்து, பிசாசென்றும், சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலு சர்ப்பத்தைப் பிடித்து, பாதாளத்தில் தள்ளியடைத்து முத்திரை போட்டான் (வெளி. 2:2).

« Prev 560 / 564 Next »